விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.
இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் பிரதீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவருடன் உள்ள சக போட்டியாளர்கள் முன்வைக்கின்றனர்.
அதன்படி, 'நைட்ல ஒழுங்கா தூங்க கூட முடியல. சில பேருக்கு இவரால பயமா இருக்கு' என பூர்ணிமாவும், 'கெட்ட வார்த்த பேசுறாரு.அதுவும் தவறான நோக்கத்தில் பேசுறாரு' என ஜோவிகாவும், 'என்னோட அருணாக்கயிறு மட்டும் இவரு பேசுறாரு' என ரவீனாவும், 'டாய்லெட் போகும் போது கதவ திறந்துட்டு தான் இருக்காரு' என மணியும் சொல்ல இறுதியாக 'இதுக்கு என்ன தீர்ப்பு வழங்கணும் என்று எனக்கு தெரியும்' என சொல்லி முடிக்கிறார் கமல். இது தான் இரு வெளியான ப்ரோமோ. என்ன தீர்ப்பு வழங்கப் போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
#Day34 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 4, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/raErDmqSHf
Listen News!