• Jul 01 2025

என்ர வாழ்க்கையை படமாக எடுத்தால்.. இதுதான் டைட்டில்.! சாய்பல்லவி ஓபன்டாக்.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தனது இயற்கையான நடிப்பு, அழகு, தரமான கதைகளை தேர்வு செய்யும் மாறுபட்ட அணுகுமுறை என்பவற்றின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தவர் நடிகை சாய் பல்லவி.


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில், "உங்களது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு பயோபிக் படம் எடுக்கப்பட்டால், அதற்குப் பெயர் என்ன வைப்பீர்கள்?" என நிரூபர் கேட்ட கேள்விக்கு, சாய் பல்லவி கொடுத்த பதிலும், விளக்கமும் தற்போது ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

அந்த நேர்காணலில் சாய் பல்லவி, "‘50 Shades of Pallavi’ என்று தான் டைட்டில் வைப்பேன்! ஏனென்றால், வாழ்க்கையில் நம்ம எல்லாரும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் வேறுபடுவோம். நானும் அதே மாதிரி தான். எனது தோழிகளுடன் இருப்பது போல, சினிமா செட்டில் இருப்பது இல்லை. அதேமாதிரி என் பெற்றோர்களுடன் வேற மாதிரி இருப்பேன். எனவே, எனக்குள் பல Pallavi-கள் இருக்கின்றன. அந்த பல பரிமாணங்களையும் பிரதிபலிக்க இந்த பெயர் தான் சரியாக இருக்கும்." எனப் பதிலளித்திருந்தார்.


இந்த ‘50 Shades of Pallavi’ பதில் வைரலான பிறகு, சமூக வலைத்தளங்களில் சாய் பல்லவியைப் பற்றிய மீம்கள், பாராட்டுகள், கேப்ஷன்கள் குவிந்தன. அத்துடன் இதனைப் பார்த்த ரசிகர்கள், "சாய்பல்லவி always special..! " என்று கமெண்ட்ஸினையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement