• Dec 29 2025

ரஜினி சாரோட நடிக்க வாய்ப்பு கிடைத்தாலே போதும்.. வேறு எதுவும் வேண்டாம்! பிரபல நடிகர் பகீர்

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தன்னுடைய நடிப்பு திறமை மற்றும் தனித்துவமான கேரக்டர் தேர்வுகளால் புகழ்பெற்றவர் நடிகர் உபேந்திரா. சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் அவர் வெளியிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நடிகர் உபேந்திரா அதன்போது, "பொதுவாக மற்ற இயக்குநர்களிடம் கதை கேட்கும் போது நான் மிகவும் கவனமாக இருப்பேன். ஆனால், ரஜினி சாரின் படமாக இருந்தால் எனக்கு கதையே தேவையில்லை. அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் நான் ஒருபோதும் கதையையோ விளக்கத்தையோ எதிர்பார்க்க விரும்புவதில்லை. அந்த வாய்ப்பே எனக்குப் போதும்." என்று தெரிவித்திருந்தார். 

இந்தக் கருத்து தற்போது திரையுலகில் மட்டும் அல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.


உபேந்திரா, தமிழ் சினிமாவில் சமீபத்திய படங்களில் நடித்து மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவரது நடிப்பின் தனித்துவம், கதாபாத்திரங்களுடன் முழுமையாக இணைவது என்பன திரைக்கதையின் வேறுபட்ட அம்சங்களை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது.

இந்தக் காரணத்தால், உபேந்திரா போன்ற நடிகர்களும் ரஜினி படங்களில் நடிக்கும் வாய்ப்பை வாழ்க்கையின் பெரிய வெற்றியாகக் கருதுகிறார்கள். உபேந்திரா குறிப்பிட்டது போல், “அந்த வாய்ப்பே போதும்” என்பது அவரது ரஜினி படங்களில் நடிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

Advertisement

Advertisement