• Jan 19 2025

எனக்கு பச்சையா மாப்பிள்ளை வேணும்! அதனால தான் 4வது திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு? அடம்பிடிக்கும் வனிதா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். 

இவர் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதில் இவரது திருமண வாழ்க்கையும் அடங்கும். அதாவது முதலில் நடிகர் ஆகஷை வனிதா திருமணம் செய்து கொண்டார். 

ஆனால் சில வருடங்களிலேயே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சில வருடங்களில் பிரிந்தார். 


இதை தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையை காட்டி அசத்தியிருந்தார். மேலும் டைட்டில் வின்னர் பட்டத்தையும் அடித்தார். 

அதன்பின், சமையல் திறமையை காட்ட யூடியூப் சேனல் ஒன்று தொடங்கினார்.அதில் அவருக்கு உதவியாளராக வந்தவர் தான் பீட்டர் பால். ஏற்கனவே திருமணமான இவரை, மூன்றாவது முறையாக வனிதா விஜயகுமார் கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் அவரும் நிலைக்கவில்லை, உயிரிழந்து விட்டார்.


இந்த நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வனிதாவிடம் தொகுப்பாளர் திருமணம் பற்றி கேட்க, அதற்கு வில்லங்கமாக பதில் அளித்துள்ளார். 

அதன்படி அவர் கூறுகையில், நான் இதுவரை சட்டப்படி இரண்டு முறை தான் திருமணம் செய்து இருப்பதாகவும், மூன்றாவது முறையும் செய்வேன் என கூறி இருக்கிறார்.

4ம் திருமணம் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு என கூறிய அவரிடம் மாப்பிள்ளை கருப்பா இருக்கணுமா இல்லை செகப்பா இருக்கணுமா என தொகுப்பாளர் கேட்டதற்கு, 'பச்சையாக இருக்கனும். குபேரன் போல பச்சையாக இருக்க வேண்டும். அப்படி ஒருவரை தான் தேடிக்கொண்டிருக்கிறேன்' என காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார் வனிதா.

Advertisement

Advertisement