• Jan 18 2025

''நான் சந்திரமுகியை பார்த்தன்'' மாயாவுக்கு செருப்படியா? பாராட்டா? பிக் பாஸ் வீட்டில் பிரபல இயக்குநர் என்ட்ரி

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன்னும் இரண்டு நாட்களில் கிராண்ட் பினாலே நடைபெற உள்ள நிலையில், தற்போது பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நடைபெற்று வருகின்றது.

பிக் பாஸ் வீட்டிற்கு தமிழ் திரையுலகில் காமெடி நடிகராகவும், பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட அருண் காமராஜ் உள்ளே சென்றுள்ளார்.


இவ்வாறு உள்ளே சென்ற இயக்குநர் அருண் காமராஜ், பிக் பாஸ் போட்டியாளர்களுடன் காரசாரமாக உரையாடி உள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் அருண் காமராஜ், மாயாவுடன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அதாவது, இயக்குநர் அருண் காமராஜ், பிக் பாஸ் போட்டியாளர்களின் முன்னிலையில் கேட்ட கேள்விக்கு, மாயா மட்டுமே கைகளை உயர்த்தி பதிலளித்து இருப்பார்.

இதன்போது, அவர் பேசியவற்றை திரிவுபடுத்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


எனினும் குறித்த வீடியோவில் அவர் உண்மையிலே மாயாவின் நேர்மையான தன்மையையும், அவரின் கேம் ஸ்பிரிக்டிக்காகவும் மாயாவை  பாராட்டியுள்ளார்.

தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருவதுடன், இதற்கு சார்பாகவும் எதிராகவும் கமெண்ட்களை குவிக்கப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement