• Jan 19 2025

நடிகர் சூரியின் மொத்த சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- இந்தத் தொழிலும் செய்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலாக் கபடிக் குழு என்னும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமானவர் தான் நடிகர் சூரி.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன.

இதனால் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியில் நடித்து கலக்கினார்.முக்கியமாக சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.


காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர்.

மேலும் விடுதலை 2 படத்தில் நடித்துவரும் சூரி; ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்திருக்கும் ஏழு கடல் ஏழு மலை என்ற படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில்கூட அந்தப் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியானது.


நடிகர் சூரி நடிப்பு தவிர்த்து ஹோட்டல் தொழில் உள்ளிட்ட தொழில்களையும் செய்துவருகிறார். மதுரையில் அவருக்கு சொந்தமாக ஹோட்டல் இருப்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 45லிருந்து 50 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கும் என கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு 2 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்குவதாகவும் ஒரு தகவல் உண்டு.


Advertisement

Advertisement