கடந்த காலங்களில் சினிமா வாய்ப்பை பெறுவதற்காக பலரும் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த சம்பவங்கள் நாம் அறிந்ததே. உதாரணமாக அஜித், ரஜினி போன்றோர் ஆரம்பத்தில் கூலி வேலை செய்து அதற்குப் பிறகு படிப்படியாக தமது விடாமுயற்சியாலும் உழைப்பாலும் முன்னுக்கு வந்தார்கள்.
ஆனால் தற்போதைய காலகட்டங்களில் பட வாய்ப்புகள் பலருக்கு ஈசியாக கிடைத்து விடுகின்றன. அதற்கு காரணம் சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகியுள்ள ஆப்ஸ்கள் தான்.
அதாவது தற்போது இன்ஸ்டாகிராம், டிக் டாக், ட்விட்டர், யூடியுப் என பல சமூக வலைத்தளங்கள் பலரின் திறமையை எடுத்துக்காட்டுவதற்கு ஓர் கருவியாக செயல்படுகிறது. இதில் தமது வீடியோக்களை பதிவிட்டு தமக்குத் தேவையான துறையில் ஈசியாக நுழைந்து விடுகின்றார்கள்.
அந்த வகையில் டிக் டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்களான ஜி.பி முத்து, காத்து கருப்பு கலை, திருச்சி சாதனா போன்ற பலர் தற்போது சினிமா துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்து கொண்டு இருந்தார். அதேபோல காத்து கருப்பு கலையும் அண்மையில் தான் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தமானார். இது தொடர்பான வீடியோக்களும்படு வைரல் ஆனது.
இந்த நிலையில், தற்போது திருச்சி சாதனா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி உள்ளன.
அதாவது 'அறம் செய்' என்ற படத்தில் மறைந்த ஜெயலலிதா அவர்களின் வேடத்தில் திருச்சி சாதனா நடித்துள்ளார். மேலும் இந்த கேரக்டரை ஏற்று நடிப்பதற்கு பலர் தயங்கிய போதும் தான் தைரியமாக துணிந்து நடித்ததாகவும், இந்த படத்தை நேரடியாக தியேட்டருக்கு சென்று பாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது இது தொடர்பிலான புகைப்படங்களும் பேட்டிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதோடு, திருச்சி சாதனா ஜெயலலிதா கேரக்டரில் நடித்துள்ள விடயம் பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!