• Jun 30 2024

ஈஸ்வரிக்காக பாக்கியா செய்த காரியம்.. மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவாரா ஈஸ்வரி?

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் பாக்கியா, ராமமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் இனியா ஆகியோர் கும்பகோணம் போய் சேருகின்றார்கள். அங்கு ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்குவது போல காட்சிகள் காட்டப்படுகின்றது.

அங்கு இருந்த ஈஸ்வரி எனக்கு ரொம்ப பிடிச்ச ஊரு இதுதான் என சொல்ல, அப்ப உங்களுக்கு இங்க பிரெண்ட்ஸ் எல்லாம் இருக்காங்களா என்று இனியா கேட்கின்றார்.


அதற்கு ஈஸ்வரி எனக்கு இங்க வந்ததும் சாவித்திரி ஞாபகம் தான் வருது என்று சொல்லுகிறார். மறுநாள் எல்லாரும் கோவிலுக்கு சென்று அமர்ந்திருக்கையில் அங்கு பாக்கியா, சாவித்திரியை கூட்டி வருகின்றார்.


அவரைப் பார்த்ததும் ஈஸ்வரி சந்தோஷத்தில் அவரை கட்டி அணைத்து கொள்கிறார். அதன்பின்பு சாவித்திரி உங்க கல்யாணத்துல ஈஸ்வரி என்ன பண்ணினா தெரியுமா என கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கின்றார். இதை பார்த்து ராமமூர்த்தி ஈஸ்வரி எப்பவும் இப்படியே சந்தோஷமாய் இருக்கனும் என்று சொல்லுகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ..

Advertisement

Advertisement