• Jul 03 2025

"பரியேறும் பெருமாள்"கதை முதலில் அதர்வாவிற்குத்தான் கூறினேன்...!மனம் திறந்த இயக்குநர்...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கதிர் இவர் பல திரைப்படங்களில்  நடித்து வருகின்றார். மேலும் இவர் நடித்த "பரியேறும் பெருமாள் " திரைப்படத்தில் நடித்து  ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் இந்த படத்திற்கு அதர்விற்குத் தான் முதலில் கதை கூறியதாக இயக்குநர் மாரி செல்வராஜ்  கூறிய விடயம் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது .


பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் மற்றும் ஆனந்தி  நடிப்பில் வெளியாகி உள்ளது.  இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல  வரவேற்பை பெற்றுள்ளதுடன் வசூல் ரீதியிலும் சாதனை படைத்திருந்தது. இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

தற்போது  சமீபத்தில் இடம்பெற்ற நேர்காணலில் "பரியேறும் பெருமாள்"  படத்திற்கு முதலில் அதர்வாவிடம் தான் கதையை சொன்னேன் அவர் பிஸியாக நடித்து வந்தமையால்  அவரால் நடிக்க முடியவில்லை என இயக்குநர்  மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.மேலும் அதர்வா நடிக்காதது  மிகவும் வருத்தமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இச் செய்தி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதுடன்  ரசிகர்கள்  தங்கள்  கருத்துக்களை  பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement