• Sep 19 2025

ரோபோ சங்கரின் மரணம் நிகழ்ந்தது எப்படி..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம்  பிரபலமானவர் ரோபோ சங்கர்.  ரோபோ போலவே வேடம் அணிந்து இளம் வயதில் இவர் வித்தைகளை காட்டி வந்த நிலையில், ரோபோ சங்கர் என்றே அழைக்கப்பட்டார்.  சிவாஜி, கமலஹாசன் போல் மிமிக்ரி செய்வது, அவர்களைப் போல்  நடித்துக் காட்டுவதெல்லாம்  இவருக்கு சாதாரணம். 

ஆனால் இவ்வளவு சீக்கிரம் உடல் நலக் குறைவு காரணமாக ரோபோ சங்கர் உயிரிழந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  இவருடைய மறைவு குடும்பத்தினரை மட்டும் இல்லாமல்  ஒட்டுமொத்த தமிழ்  திரையுலகினரையும்  கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில், ரோபோ சங்கருக்கு இறுதியாக சிகிச்சை  பார்த்த  ஜெய் மருத்துவமனை அவர் எப்படி இறந்தார் என்றும் அவருடைய உயிர் எத்தனை மணிக்கு பிரிந்தது என்றும் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. 


அதன்படி, ரோபோ சங்கர் செப்டம்பர் 16ஆம் தேதி மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு குடலில் இரத்தப்போக்கு இருந்தது. மேலும் உள்ளுறுப்புகள் செயல் இழந்த நிலையில் வயிற்றுப் பகுதியிலும் மிகத் தீவிரமான பிரச்சனைகள் இருந்துள்ளன. 

தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சைகளை அழித்து வந்த போதும் பலன் கிடைக்கவில்லை. செப்டம்பர் 18ம் தேதி அன்று இரவு  9.05 க்கு அவரது உயிர் பிரிந்தது என ஜெய் மருத்துவமனை மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 




 

Advertisement

Advertisement