சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , ராணியை மடக்குவதற்காக மனோஜ் போட்ட திட்டம் தவிடு பொடியாகின்றது. இதனால் மனோஜ் ராணியிடம் மாட்டிக் கொள்கின்றார்.
அதன் பின்பு மனோஜ் பேசியதை வீடியோவாக எடுத்த ராணியும் அவரது புருஷனும் இனி எங்களுக்கு ஆதாரம் இருக்கு, நாங்க என்ன கேட்டாலும் நீங்க செய்யத்தான் வேண்டும் என்று புதிதாக வாஷிங் மெஷின் ஒன்றை வாங்கி செல்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து விஜயா யோகா கிளாஸ் ஆரம்பிக்கின்றார். அங்கு தான் க்ரிஷை காப்பாற்றியதாகவும், க்ரிஷை சீர்திருத்த பள்ளியில் சேர்க்க விடாமல் முத்துவுடன் சேர்ந்து முயற்சி செய்ததாகவும் அங்கு இருந்தவர்களுக்கு சொல்லுகின்றார். இதனை பார்வதி வீடியோவாக எடுக்கின்றார்.
இவற்றையெல்லாம் வெளியில் இருந்து கேட்டுக் கொண்ட மீனா கைதட்டி கொண்டே எங்க அத்த போல யாரும் வராது.. அவர் உண்மையாவே க்ரிஷை காப்பாற்ற போராடினார் என்று குத்தி காட்டி பேசுகின்றார். அதன் பின் விஜயா மீனாவிடம் இதை வீட்டில் சொல்ல வேண்டாம் என்று சொல்லுகின்றார்.
ஆனால் வீட்டுக்கு வந்த மீனா யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று நடந்தவற்றை முத்துவிடம் சொல்லுகின்றார். அந்த நேரத்தில் மீனாவின் அம்மா க்ரிஷின் பாட்டி வந்து அவரை அழைத்துச் செல்வதற்கு தகராறு பண்ணுவதாக சொல்லுகின்றார்.
இதனால் உடனடியாக அங்கு சென்ற முத்துவும் மீனாவும் இத்தனை நாள் எங்கு இருந்தீங்க என்று கேட்க , நான் க்ரிஷை கூட்டிச் செல்கின்றேன் என்று முத்து மீனாவுடன் வாக்குவாதம் பண்ணுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!