• Sep 19 2025

பலரின் கண்ணீருடன் மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ரோபோ சங்கரின் உடல்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித் திரையிலும் பிரபலமானவர் ரோபோ சங்கர்.  இவர் தனுசுடன் மாரி, விஷாலுடன் இரும்புத்திரை, விஷ்ணு விஷால் உடன் வேலைனு வந்துட்டா வேலைக்காரன் போன்ற படங்களில் தனது  தனித்துவமான  நகைச்சுவை நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

மேலும் 'கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்', 'கன்னித் தீவு', 'செம்பருத்தி', 'டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2' போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் பிரபலமானவர்.  இறுதியாக  சொட்ட சொட்ட நனையுது என்ற படத்தில் நடித்திருந்தார்.


ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர், தனது விடாமுயற்சியினால்  உடல் தேறி வந்தார்.  ஆனால்  படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


இவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பலரும் தங்களுடைய இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றார்கள். மேலும் நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும்  நேரடியாகவே  ரோபோ சங்கரின் குடும்பத்தினருக்கு  ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில், ரோபோ ஷங்கரின் உடல் வைத்தியசாலையில் இருந்து  எடுத்துச் செல்லப்பட்ட காட்சி பலரது கண்களையும் நனையச் செய்துள்ளது.  அதில் அவருடைய மனைவி, மகள், நண்பர்கள் உட்பட பலரும் கண்ணீருடன் ரோபோ சங்கரின் உடலை  எடுத்துச் செல்கின்றனர். 

Advertisement

Advertisement