• Sep 24 2024

சூடுபிடித்த பிக் பாஸ் சீசன் 8.. புதிய ப்ரோமோவுடன் ஹாட் நியூஸ் சொன்ன மக்கள் செல்வன்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சம் தொட்ட ஷோ தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பானாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஏழு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி  வருகின்றது. இதனை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். ஆனாலும் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் இருந்து வெளியேற உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருந்தார் கமலஹாசன்.

உலக நாயகன் கமலஹாசன் தற்போது திரைப்பட பணிகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தாலும் அவர் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜி குறித்து படிக்க உள்ளது தான் முக்கியமான காரணம் என கூறப்பட்டது.


இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதன் காரணத்தினால் நயன்தாரா, சிம்பு, ராதிகா, அரவிந்த்சாமி, சரத்குமார் போன்ற பல பிரபலங்களின் பெயர் அடிபட்டன.

ஆனால் இறுதியில் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பில் ப்ரோமோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன்  ஆரம்பிக்கும் தேதி சற்று முன்பு அதிகாரபூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் அனைவருமே தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில், அவ்வப்போது சில பிரபலங்களின் பெயர்களும் வெளியாகிக் கொண்டுள்ளன. எனினும் கூடிய விரைவில் இது தொடர்பான தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement