• Dec 22 2024

உண்மை தெரிந்து ஜீவாவை வீட்டுக்கு இழுத்துச் செல்லும் முத்து! ரோகிணியின் ஆட்டம் க்ளோஸ்

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதுவரையில் ரசிகர்கள் எதிர்பார்த்த கதை களத்தில் இந்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஆகவே அடுத்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் அட்டகாசமான காட்சிகள் இடம் பெற உள்ளது.

அதன்படி தற்போது வெளியான ப்ரோமோவில், கோவிலுக்கு சென்ற  முத்துவும் மீனாவும் கண்ணாடி போட்டு விதவிதமாக போட்டோ எடுத்துக் கொள்கின்றார்கள். இதனை சீதாவின் அம்மாவும் சீதாவும் போனில் எடுத்த புகைப்படங்களை பார்க்கின்றார்கள்.

d_i_a

இதன் போது முத்துவின் போனில் ஜீவாவின் போட்டோ காணப்படுகின்றது. இதை பார்த்த சீதா  உங்க கல்யாணத்தின் போது மனோஜ் கூட இவங்க தான் பேசிக்கொண்டு இருந்தாங்க என்று சொல்லுகின்றார்.

மீனாவும் அந்த போட்டோவை பார்த்துவிட்டு இவதான் உங்க அண்ணாவை காதலிப்பதாக ஏமாற்றி பணத்தை எடுத்துச் சென்றவர் என்ற உண்மையை சொல்லுகின்றார். அதன் பின்பு முத்து நேராக ஜீவா வீட்டுக்கு செல்கின்றார்.


அங்கு உனக்கு மனோஜ் தெரியுமா? அவன்கிட்ட திருடிட்டு போன காச திருப்பி கொடு என்று சத்தம் போட, அதை நான் போன தடவை வந்த போதே வட்டியுடன் 35 லட்சமா திருப்பி கொடுத்துட்டேன் என்று சொல்லுகிறார்.

இதைக் கேட்ட முத்து பொய் சொல்லாதே என்று சொல்ல, ஜீவா உண்மையாக தான் சொல்லுகிறேன் என சொல்லுகிறார். அப்படி என்றால் இந்த விஷயங்களை வீட்டில் வந்து  சொல்லுமாறு முத்து கேட்கிறார்.

இதனால் அவங்கள்ட முடிக்க வேண்டிய பழைய கணக்கு ஒன்று இருக்கு.. நான் வாரேன் என ஜீவாவும் சொல்லுகிறார். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.

எனவே இதுவரையில் ரோகிணியின் பித்தலாட்டங்கள் ஒன்றும் வீட்டுக்கு தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பி வந்த நிலையில், தற்போது அவர் தொடர்பிலான ஒவ்வொரு விஷயமும் வெளிவர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement