• Oct 13 2024

இன்னும் 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இல்லையா? யுவன் சங்கர் ராஜா அதிரடி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

கோலிவுட் சினிமாவில் இசை ஜாம்பவான்களாக திகழ்பவர்கள் தான் ஏ.ஆர் ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜா. இவர்கள் இருவரும் இசைக்கும் மெட்டுக்களுக்கு மயங்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் ஏ.ஆர் ரகுமான் துள்ள வைக்கும் பாடலை பாடினால் யுவன் சங்கர் ராஜா தனது மெல்லிசையாலே கேட்போரை கட்டி போட வைத்துவிடுவார்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். ஆரம்பத்தில் வெளியான இந்த பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் திரையரங்குகளில் யுவன் சங்கர் ராஜாவின் பாடலுக்கு கைதட்டல்கள் குவிந்தன.

அதேபோல ஏ.ஆர் ரகுமான் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்திற்கு இசையமைத்திருந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற உசுரே நீதான் என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. இந்த படம் கொடுத்த ஹிட்டுக்கு தனுஷ் ஏ.ஆர் ரகுமானுக்கு நன்றி தெரிவித்தும் இருந்தார்.


மேலும் தற்போது AI தொழில்நுட்பத்தின் ஊடாக மறைந்த கலைஞர்களை மீண்டும் நினைவூட்டும் வகையில் திரையில் காட்சிப்படுத்தி வருகின்றார்கள். அதன்படி கோட் திரைப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் ஊடாக விஜயகாந்த் மட்டுமில்லாமல் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பவதாரணியின் குரலையும் மீண்டும் உயிர்ப்பித்திருந்தார்கள்.

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா வழங்கிய பேட்டியில் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்னும் பத்து ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். AI- யால் மனிதனால் உருவாக்க கூடிய உணர்வை உருவாக்க முடியாது என ஏ.ஆர் ரகுமான் கூறியதும் உண்மைதான் என்று யுவன்  தெரிவித்துள்ளார். தற்போது இவருடைய பேட்டி வைரலாகி வருகின்றது.

Advertisement