• Oct 04 2024

விஜயகாந்தை வைத்து கார்த்தியை விளாசித் தள்ளிய ப்ளூ சட்டை மாறன்.. தெறிக்கும் பதிவுகள்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தியின் 27 வது படமாக உருவான படம் தான் மெய்யழகன். இந்த படத்தை 96 படத்தின் மூலம் அறிமுக இயக்குனரான பிரேம்குமார் இயக்கியுள்ளார். மெய்யழகன் திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதன் காரணத்தினால் மெய்யழகன் படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. தெலுங்கில் சத்யம் சுந்தரம் என்ற பெயரில் வெளியாக உள்ளது.

இதை தொடர்ந்து ஹைதராபாத்தில் நேற்றைய தினம் இடம் பெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், நடிகர் கார்த்தி, இயக்குனர் பிரேம்குமார் உட்பட குழுவினர் கலந்து கொண்டார்கள். இதன் போது உங்களுக்கு லட்டு வேண்டுமா? என தொகுப்பாளினி கார்த்தியிடம் கேட்க, அதற்கு இப்போது லட்டு குறித்து பேச வேண்டாம். அது சென்சிட்டிவான விஷயம் என கூறினார். இந்த பதிலைக் கேட்டு அங்கிருந்த பலர் கைதட்டி சிரித்தார்கள்.


நடிகர் கார்த்தியின் இந்த பேச்சை கேட்ட நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் சினிமா நிகழ்வில் லட்டு வைத்துக் கிண்டலடித்து பேசுகின்றார்கள் எனவும் அது சென்சிட்டிவான விஷயம் என சொல்கின்றார்கள். எங்களுடைய நம்பிக்கையை அப்படி சொல்லாதீர்கள். நடிகர்களுக்கு மரியாதை கொடுக்கின்றேன். அதேநேரம் சனாதான தர்மம் என வரும்போது பேசும் வார்த்தையை 100 முறை யோசித்துப் பேச வேண்டும் என கண்டித்து இருந்தார்.

இதன் காரணத்தினால் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தல பக்கத்தில் நடிகர் கார்த்தியை விளாசி தள்ளி உள்ளார். அதாவது விஜயகாந்த் உயிருடன் இருந்திருந்தால் இப்படி ஒருபோது மன்னிப்பு கேட்டிருக்க மாட்டார். நீங்கள் நடிகர் சத்யராஜை போல மன்னிப்பு கேட்டு  உள்ளீர்கள் என குறிப்பிட்டுள்ளார். தற்போது இவருடைய பதிவு வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement