• Jul 18 2025

ப்பா வேறலெவல் நடனம்; இன்ஸ்டாவில் டான்ஸ் ஆடிக் கலக்கும் ஆர்யா குடும்பம்.! வீடியோ இதோ!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்துள்ள நடிகர் ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா, இருவரும் திரைப்படங்களுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையிலும் ஒரு ‘beautiful couple’ என ரசிகர்களால் பாராட்டப்படுபவர்கள். இந்த தம்பதிகள் சமீபத்தில் தங்களது மகளுடன் நடமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளது.


இந்த வீடியோவில், ஆர்யா, சாயிஷா மற்றும் அவர்களது சிறுமி என மூவரும் மிகவும் அழகாக கைகளைப் பிடித்து நடனமாடியுள்ளனர். வீடியோவை பார்த்த ரசிகர்கள் " குடும்பம் என்றால் இப்புடி தான் ஜாலியாக இருக்கணும்.." என்று தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த கருத்துகள், தம்பதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களைப் பிரதிபலிக்கின்றன. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில மணிநேரங்களிலேயே 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement