• Aug 07 2025

திரைப்பட விமர்சனங்களுக்கு மூன்று நாள் தடை...!சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தற்போது திரைப்படங்கள் வெளியானவுடன், சமூக ஊடகங்கள், யூட்யூப், வலைத்தளங்கள், OTT விமர்சகர்கள் போன்ற பல ஊடகங்களில் விமர்சனங்கள் வெளிவருகின்றன. சில நேரங்களில் படத்தின் வருமானத்தை நேரடியாக பாதிக்கும் வகையில் இவை கண்ணேற்றமாக இருக்கின்றன என்று தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர்.அதன் அடிப்படையில், ஒரு தயாரிப்பாளர், "திரைப்பட வெளியீட்டின் முதல் மூன்று நாட்கள் எந்தவிதமான ஆன்லைன் விமர்சனமும் வெளியாகக் கூடாது" என கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து  இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன . 


இந்த நிலையில் விமர்சனம் செய்வது கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை என்று நீதி மன்றம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திரைப்பட விமர்சனங்களை தடை செய்வது என்பது ஒரு குடிமகனின் உரிமையை தவிர்க்கிற செயல்.


சுதந்திரமான சமூகத்தில், ஏதேனும் கலையை விமர்சிப்பதும், அதனுடன் இணைந்து சிந்தனை வெளியிடுவதும் ஒரு அடிப்படை உரிமை எனக் கூறப்படுகின்றது.மேலும் தயாரிப்பாளர்கள், அனைத்து விமர்சனங்களும் தங்களை பாராட்டும் வகையில் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அது யதார்த்தம் அல்ல. ஒரு திரைப்படம் பொது உரையாடலுக்குத் திறந்தது எனவே அதனை விமர்சிப்பதும் அவசியமே," என நீதிபதி வலியுறுத்தினார்.


இந்த நிலையில் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்குப் பிறகு, முதல் மூன்று நாட்களுக்கு இணையவழி விமர்சனங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தெளிவாக நிராகரித்து, இது கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது எனக் கூறி முக்கிய தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement