தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் விஜய் தேவரகொண்டா தனது புதிய திரைப்படமான ‘கிங்டம்’ மூலம் திரையரங்குகளுக்கு grand entry கொடுத்துள்ளார். இன்று (ஜூலை 31) உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை இயக்குநர் கெளதம் தின்னனூரி இயக்கியுள்ளார். படம் வெளியாகிய சில மணிநேரங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலானோர் பாசிட்டிவான விமர்சனங்களையே பதிவிட்டு வருகின்றனர் என்பது படக்குழுவிற்கு பெரிய பிளஸ் பாயின்ட்.
விஜய் தேவரகொண்டா கடந்த சில படங்களை விட ‘கிங்டம்’ திரைப்படத்தின் மூலம் புதிய பரிணாம வளர்ச்சியைக் காட்டியுள்ளார். இப்படத்தைப் பார்த்த பலரும் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, முதலாம் பாதியில் வரும் ஆக்ஷன் மற்றும் அரசியல் உரைகள் என அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தது.
மேலும் படத்திற்கு இசையமைத்துள்ளவர் அனிருத் ரவிச்சந்தர். அவரது background score கதையின் உணர்வை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் மென்மையான இசை, சிலரின் கண்களில் கண்ணீர் வரவைக்கும் அளவிற்கு இருந்ததாக சில ரசிகர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வாறாக, ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்ற இப்படம் அதிகளவான வசூலைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!