பாலிவுட்டில் தனது அழகு, நடிப்பு மற்றும் ஸ்டைலால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள நடிகை ஜான்வி கபூர், தற்போது தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருகின்றார். ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடித்த ‘தேவரா’ திரைப்படம் மூலம், தென்னிந்திய திரையுலகில் அவர் அறிமுகமானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படம் வெளியானதிலிருந்து நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமல்லாது, ஜான்வியின் நடிப்பும், காட்சிகளும் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
‘தேவரா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார்.
இதில் சமீபமாக அவர் வெளியிட்ட புதிய சாறி புகைப்படங்கள், இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில், ஜான்வி ஒரு பாரம்பரிய இந்திய சாறியில் மிகவும் அழகாகவும் ஸ்டைலிஷாகவும் தோன்றியுள்ளார். வைரலான போட்டோஸ் இதோ.!!
Listen News!