இந்திய திரையுலகின் உயரிய அங்கீகாரம் என கருதப்படும் ‘தேசிய திரைப்பட விருதுகள்’, ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படைப்பாளிகளுக்கும், கலைஞர்களுக்கும் அளிக்கப்படும் பெருமைமிக்க அங்கீகாரமாகும். இந்திய அரசு தரப்பில் 1954-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், நடிகை, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை போன்ற பல்வேறு பிரிவுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுவது வழக்கமாகும். இவ்வருடம், 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருது விழா மிகவும் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த திரைப்படம் ‘பார்க்கிங்’. இந்த திரைப்படம் 2023-ம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, மேலும் இரண்டு முக்கியமான பிரிவுகளிலும் தேசிய விருது வென்றுள்ளது.
அதாவது, சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது, சிறந்த துணை நடிகர் விருது மற்றும் சிறந்த தமிழ் படத்திற்கான விருதினை வென்றுள்ளது. இந்த தருணம், தமிழ் சினிமா மட்டுமல்லாது, ‘பார்க்கிங்’ பட குழுவினருக்கே மிகப்பெரிய பெருமையாக அமைந்துள்ளது.
Listen News!