• Dec 06 2024

இந்த வாய் தான் அந்த வாயா விஷால்..? குறும்படம் போட்டு பங்கம் பண்ணிய சவுண்டு சப்போர்ட்டர்ஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டு சுமார் ஒரு மாதத்தை நிறைவு செய்ய உள்ளது. இதுவரையில் நான்கு வாரங்களை கடந்த இந்த சீசனிலிருந்து மூன்று பேர் எலிமினேட்டாகி  வெளியேறி உள்ளனர்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து வாராவாரம் ஒருவர் எலிமினேட் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் முதலாவதாக தயாரிப்பாளர் ரவிந்தர் எலிமினேட் ஆனார். அவரை தொடர்ந்து சீரியல் நடிகரான இன்ஸ்டா பிரபலம் தர்ஷா குப்தா வெளியேறினார். 

d_i_a

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆண்களை சௌந்தர்யா தவறாக டச் பண்ணுகின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த விஷாலின் குறும்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றார்கள்.


அதாவது பிக் பாஸ் வீட்டில் சௌந்தர்யா சக ஆண் போட்டியாளர்கள் மீது தவறாக தொடுதல் வைக்கின்றார் என்றும், அவரது நடவடிக்கை சரி இல்லை என்றும் விஷால் கூறியிருப்பார். இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் விஷாலின் உண்மையான முகத்தை குறும்படம் போட்டு காட்டியுள்ளனர்.

அதாவது பிக் பாஸ் வீட்டில் விஷால் தான் சௌந்தர்யாவிற்கு பின்னால் சுற்றி திரிவதும், அவர் நடனம் ஆடுவது போல் ஆடுவது பேசுவது என சில்மிஷங்களை செய்து வம்பிழுத்துள்ளார். இப்படி செய்த விஷால் தான் சௌந்தர்யாவை பற்றி புறம் பேசுகின்றாரா என தற்போது அவருக்கு எதிராக நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement