• Sep 04 2026

சண்முக பாண்டியனின் அடுத்த படத்தில் இப்படியொரு ட்விஸ்டா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

shali / 59 minutes ago

Advertisement

Listen News!

நடிகரும் கேப்டன் விஜயகாந்தின் மகனுமான சண்முக பாண்டியன், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவரது அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கு தற்போது PRODUCTION NO. 10 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் மணிசேயோன் இயக்குகிறார். இதன் மூலம் சண்முக பாண்டியன் மற்றும் மணிசேயோன் கூட்டணி முதன்முறையாக இணைகிறது.


படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் இணைந்து நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சண்முக பாண்டியன் ஏற்கனவே ‘சகாப்தம்’, ‘மதுர வீரன்’, ‘படை தலைவன்’ மற்றும் ‘கொம்புசீவி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவரது அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் சண்முக பாண்டியனின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement