• Oct 15 2026

‘கைதி 2’ இசையமைப்பாளர் இவர்தானா? இணையத்தில் பரவும் சுவாரஸ்யமான தகவல்கள்..

shali / 1 month ago

Advertisement

Listen News!

சாம் சி.எஸ். மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கூட்டணிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக, ‘கைதி’ படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் அடுத்த பாகமான ‘கைதி 2’ படத்திற்கும் சாம் சி.எஸ். இசையமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் சாம் சி.எஸ். சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘கைதி 2’ குறித்து பேசியுள்ள கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன. அதில், “பல வருடங்களுக்கு முன்பே லோகேஷ் கனகராஜ், ‘கைதி 2’ படத்திற்கு நீதான் இசையமைப்பாய் எனக் கூறியிருந்தார். 


அந்த வாய்ப்பு எனக்கு வந்தால் 100 அல்ல, ஆயிரம் சதவீத உழைப்பை கொடுப்பேன். அதேநேரம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வருத்தப்பட மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

‘கைதி’ படத்தின் வெற்றிக்கு சாம் சி.எஸ்ஸின் இசை முக்கிய பங்காற்றியிருந்தது. இதனால் ‘கைதி 2’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சாம் சி.எஸ். தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்திருப்பது, இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கார்த்தி மீண்டும் டில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள ‘கைதி 2’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement