மலையாள சினிமா தற்பொழுது புதுமையான முயற்சிகளுக்கும், பான்-இந்திய அணுகுமுறைக்கும் முதன்மை அளிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வித்தியாசமான போக்கை உருவாக்கிய தயாரிப்பாளராக இன்று அனைவராலும் பாராட்டப்படுபவர் ஷரீப் முஹமது.
‘மார்கோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, தற்போது அவர் தயாரிக்கும் இரண்டாவது படமான ‘கட்டாலன்’ பலவித விசேஷங்களை உள்ளடக்கியுள்ளது. அதிலும் சிறப்பானது என்னவென்றால், ‘காந்தாரா’ படத்தின் இசையமைப்பாளர் அஜனீஷ் லோகநாத் இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமாவுக்கு அறிமுகமாகிறார் என்பதுதான். இது ஒரு மல்டி-இண்டஸ்ட்ரி காம்பினேஷன் என ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
2022-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மரபுக் கலை மற்றும் தெய்வ நம்பிக்கையை சினிமா வடிவத்தில் கொண்டு வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தான் ‘காந்தாரா’. அந்தப் படத்தில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இசை காணப்படுகின்றது.
அந்த இசைக்கு உயிர் கொடுத்தவர் தான் அஜனீஷ் லோகநாத். அவர் இசையமைத்த பல பாடல்கள் தியட்டர்களையே அதிரவைத்தன. அந்த மாதிரியான ஒரு கன்னட இசையமைப்பாளர், தற்போது மலையாள திரைப்படம் ஒன்றில் முழுமையாக பணியாற்றுவது என்பது, அந்தத் திரைத்துறைக்கே ஒரு பெருமையாக அமைந்துள்ளது.
Listen News!