• Sep 09 2024

வீரா சீரியல் நடிகைக்கு ரகசியமாய் நடந்த திருமணம்... வரலாகும் புகைப்படங்கள் இதோ...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா சீரியல் நடிகைக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளது. இதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  வீரா தொடரில் வைஷ்ணவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வர அருண் சேவியர் நாயகனாக நடித்து வருகிறார். ஊர் வம்பு லட்சுமி, பசங்க சிவக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.


3 தங்கைகளுக்கு அண்ணனான சுப்பு சூரியன் விபத்தில் இறந்துவிட அந்த விபத்தை ஏற்படுத்தியவரின் குடும்பத்தில் அவரது தங்கைகள் திருமணம் நடக்கிறது. தங்கையாக நடிப்பவர்களில் ஒருவர் தான் சுபிக்ஷா. இவர் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை சுபிக்ஷாவிற்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. 


நடிகை சுபிக்ஷா, சீரியல் நடிகர் மற்றும் நடன இயக்குனர் மானஸ் என்பவரை திருமணம் செய்த நிலையில் திருமணமான இரண்டே வருடத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்த நிலையில் நேற்று கேரள தொழிலதிபர் அவினாஷ் வாசுதேவன் என்பவரை சுபிக்ஷா, இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.அவரது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

Advertisement

Advertisement