தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமீர்கான், கன்னட நடிகரான உபேந்திரா, தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் ஆன நாகார்ஜுனா, மலையாளத்தில் பிரபலமான சௌபின் சாஹிர் இவர்களுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கூலி.
கூலி திரைப்படம் வெளியான முதல் நாளையே 152 கோடிகளை வசூலித்திருந்தது. இந்த படம் முதல் நாளிலேயே அதிகமாக வசூலித்த தமிழ் படம் என்ற மாபெரும் சாதனையை படைத்தது . நான்கு நாட்களின் முடிவில் அதிகபட்சமாக 404 கோடிகளை வசூலித்து மேலும் ஒரு சாதனையை படைத்திருந்தது.
கூலி படத்தில் நடித்த நடிகர்களுக்கு மட்டுமே 350 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும் இந்த படத்திற்கு 600 கோடி வரையில் செலவாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. கூலி படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து இப்போது வரையில் நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் வெளியான போதும் மக்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த நிலையில், கூலி படத்தின் ஆறாவது நாள் வசூல் 9.50 கோடி எனக் கூறப்படுகின்றது. இந்த படம் கடந்த திங்கட்கிழமை 12 கோடி வசூலித்ததாகவும் தமிழகத்தில் மட்டும் கூலி திரைப்படம் ஆறு நாட்களில் சுமார் 216 கோடியை வசூலித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Listen News!