தமிழில் வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த இவர் தனுஷ் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து பாராட்டைப் பெற்றதோடு இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார்.
இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, இடம் பொருள் ஏவல், தர்மதுரை போன்ற படங்களில் நடித்தார். இவருடைய முகத்திற்கு ஏற்றது போலவே கிராமப்புற கதைகளை மையமாகக் கொண்ட படங்களிலேயே அதிக அளவு வாய்ப்பு கிடைத்தது.
ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்தில் சிலர் ஏற்கனவே சினிமாவில் இருந்தவர்கள். அதன்பின்பு பெண் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தார். ஆனால் அதுவும் அவருக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை.
இந்த நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கல்யாணம் பண்ணலாமா? வேண்டாமா? என பத்திரிகையாளர்களிடமே கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் வேண்டவே வேண்டாம் என கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
இதை பார்த்த ஐஸ்வர்யா என்ன எல்லாருமே கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் என்று சொல்லுறீங்க என ஷாக் ஆகிவிட்டார். மேலும் எனக்கு கல்யாணம் என்றால் நிச்சயமாக நானே முன்வந்து மீடியாவிடம் சொல்லுவேன் என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
Listen News!