• Jan 19 2025

குடும்பத்தாருடன் வெளிநாட்டில் சுற்றி திரியும் வெற்றிமாறன்.. இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள் இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் இருந்து தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விடுதலை 1 திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து தற்போது விடுதலை 2 படத்திற்காக பணியாற்றி வருகிறார். 


இந்த ஆண்டு வெளியாகவுள்ள விடுதலை 2 படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். விடுதலை 2 படத்தை நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் மாகாணத்தில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் விடுதலை 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்டுள்ளன. படத்தை பார்த்தவர்களை தொடர்ந்து 10 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர். 


அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது. சிறந்த வரவேற்பை திரைப்பட விழாவில் விடுதலை 1 மற்றும் 2 பெற்றுள்ள நிலையில், படத்தின் மீது எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. இந்நிலையில் ரோட்டர்டாம் சென்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement