• Feb 23 2025

என்னை விட்டு கொடுக்க மாட்டார்... காருக்குள்ள தான் குடும்பம் நடத்தினோம்... சிறகடிக்க ஆசை அண்ணாமலையின் ரியல் மனைவி ஓப்பன் டாக்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி சீரியலில் தற்போது அண்ணாமலை கேரக்டரில் நடிக்கும் நடிகர் சுந்தர்ராஜன் அவர்கள் ஆரம்பத்தில் இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல பன்முகங்களை கொண்டவர். சுந்தர்ராஜன் துர்கா என்ற டப்பிங் கலைஞரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கார்த்திக், தீபன், அசோக் என 3 மகன்கள் உள்ளனர். இதில் ஒருவர் 2004ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்துள்ளார்.


சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சுந்தர்ராஜனின் மனைவி பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில் அவர், " என்னுடைய கணவர் ஆரம்ப காலகட்டத்தில் பிஸியாக வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அந்த சமயங்களில் காரில் தான் குடும்பம் நடத்தினோம்"."என் கணவர் ஒரு இடத்தில் ஷூட்டிங்கில் இருப்பார்.


நான் ஒரு இடத்தில் டப்பிங் செய்துகொண்டு இருப்பேன். அப்போது காரில் வந்து சந்திப்பார் நாங்கள் குடும்ப பிரச்சனைகள், அடுத்து என்ன செய்வது என்பதை காருக்குள் வைத்து தான் பேசுவோம்"


மேலும் அவர் கூறுகையில், "என் கணவர் என்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்தது கிடையாது. அதுபோல அவர் கோபப்பட்டால் நான் சமாதானம் செய்வேன். நான் கோபம் அடைந்தாள் அவர் சமாதானம் செய்வார். இந்த வயதிலும் நாங்கள் காதலித்து வருகிறோம்" என்று சுந்தர்ராஜனின் மனைவி துர்கா தெரிவித்து உள்ளார். 

Advertisement

Advertisement