• Jan 19 2025

27 லட்சம் கிடைத்து விட்டதா?.. மனோஜ் ஜாதகத்தில் இனி நல்ல ராசி தானம்!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் மராத்தி என பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகின்றது.

அத்துடன் கடந்த வாரம் வெளியான டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியின் பிரபல சீரியலான எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்குத் தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தற்போது இந்த சீரியலில் மனோஜ் தேடிக் கொண்டு இருந்த ஜீவா அவர் கையில் சிக்கிய நிலையில், அவரை போலீசிடம் ஒப்படைகிறார். ஆனாலும் தான் பணத்தை கொடுக்க மாட்டேன் என ஜீவா சொல்லும்  நிலையில், இனி எப்படி அந்த 27 லட்சத்தையும் வாங்கி எடுக்கப் போகிறார் என பொறுத்து இருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் முத்து, மனோஜ் ஆகிய இருவரும் காரில் பாட்டு போட்டுக் கொண்டு ஜாலியாக செல்லும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள்.


அதில் அட ஆள்தோட்ட பூபதி நானடா என்ற பாடலை பாடிக் கொண்டு நான் கண்ணன் ராசி, நீ கன்னி ராசி இனி நம்ம ஜாதகத்தில் நல்ல ராசி என மனோஜ் குதூகலமாக இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் அப்போ மனோஜ்க்கு 27 லட்சம் கிடைத்து விட்டது போல, ஒரே குளு குளு என்று இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்.


Advertisement

Advertisement