• Dec 21 2024

கோவாவில் 3 மாசமா ஒன்னா இருந்தாங்களா? காரணங்களை அடுக்கிச் சென்ற பிரபலம்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் ஜெயம் ரவி. தற்போது ஜெயம் ரவி தனது காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக அதிகாரவபூர்வமாகவே அறிவித்திருந்தார். இதை அறிந்த பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அதிர்ச்சியில் காணப்படுகின்றார்கள்.

இதை தொடர்ந்து இவர்களுடைய விவாகரத்துக்கு காரணம் ஆர்த்தி நடவடிக்கைகளும் அவரது அம்மா விரித்த கட்டுப்பாடுகளும் தான் என ஒரு சாரார் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் இன்னொரு பக்கம் ஜெயம் ரவிக்கு வேறொரு தொடர்பு உண்டு அதனால் தான் அவர் ஆர்த்தியை விவாகரத்து செய்கின்றார் என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி விவாகரத்துக்கு காரணம் என்ன? ஜெயம் ரவி ஆர்த்தி மீது ஏன் இவ்வளவு வெறுப்பில் இருக்கின்றார் என வலைப் பேச்சு அந்தணன் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், ஆர்த்தி அவ்வப்போது சந்தேகப்பட்டது உண்மைதான். ஆனால் அது ஏன் வந்துச்சுன்னா அதுக்கு காரணம் கிட்டத்தட்ட மூன்று மாதமாக கோவாவில் ஜெயம் ரவி இருந்தார். அவங்க வீட்டுல இருந்து அவரை தொடர்பு கொள்வதற்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. எப்போதாவது தான் வீட்டுக்கு வருவார். அதுவும் ஆர்த்தி பற்றி பேசினால் சண்டை போட்டுட்டு போயிடுவாராம்.


இல்லறம் என்றாலே நிறைய பிரச்சனைகள் இருக்கும். சண்டைகள் வரும். இது ஒரு விஷயம் கிடையாது. ஆனா அவர் மனைவியை சமாச்சார படுத்துற கட்டத்துக்கு ஜெயம் ரவி போகல என்கிறது தான் தெரியுது. வீட்டோட மாப்பிள்ளை வச்சிருந்தா கூட எங்கேயோ ஒரு தொடர்பு வந்துடுது. அவங்க குடும்பத்து மேல வெறுப்பு வருது ஆர்த்தியோட செலவும் இதற்கு காரணம்.

ஆனால் ஆர்த்தி மேல ஏன் இவ்வளவு வெறுப்பு வந்துச்சுனா சந்தேகப்படுதல், செலவு, வீட்டோட மாப்பிள்ளையில் வரும் நெருக்கடி எல்லாம் சேரும்போது எங்கேயாவது ரிலேக்ஸ்  கிடைக்காதா என்று பார்த்திருப்பார். அந்த சம்பவத்தின் காரணமாகத்தான் இது நடந்திருக்கு என்று தெரிகிறது.

இதே வேளை கோவாவில் ஜெனிஷா பிரான்சிஸ் என்ற காதலியுடன் மூன்று மாதமாக ஜெயம் ரவி இருந்ததாக சொல்கின்றார்களே அது உண்மையா என்று கேட்டதற்கே அந்தணன் இவ்வாறு பதில் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement