விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுள் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் வெற்றி வசந்த் ஹீரோவாகவும், கோமதி பிரியா நாயகியாகவும் நடித்து வருகின்றார்கள்.
மேலும் இந்த சீரியலில் ஆர் சுந்தர்ராஜன், அனிலா குமார், சல்மா அருண், ஸ்ரீ தேவா, பாக்கியலட்சுமி, ப்ரீத்தா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டில் முதல் இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் தக்க வைத்து வருகின்றது .

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் வில்லி கேரக்டரில் நடிக்கும் சல்மா அருண் இன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடுகின்றார். தற்போது அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே தனக்கு திருமணமாகி மகன் இருக்கின்றார் என்பதை மறைத்து வந்த ரோகிணி பற்றிய சீக்ரெட் மீனாவுக்கு தெரிய வருகிறது. எனவே இந்த விடயம் விஜயா வீட்டாருக்கு தெரியாத நிலையில் இதைப் பற்றிய உண்மை தெரிந்தால் மீனாவும் சேர்ந்து வெளியே துரத்தப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!