• Feb 24 2025

புஷ்பா திரைப்படத்தால் கெட்டுப்போகும் மாணவர்கள் ..! அரசுப்பள்ளி ஆசிரியர் வருத்தம்..

Mathumitha / 2 hours ago

Advertisement

Listen News!

2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ,ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியாகிய புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகிய அன்றே பெண் ஒருவர் தியேட்டரில் இறந்தமை போன்ற பிரச்சனைகளை படக்குழு சந்தித்தது.

தற்போது இந்த படத்திற்கு புது பிரச்சனை எழுந்துள்ளது.அதாவது ஹைதராபாத் அரசுப்பள்ளி ஆசிரியர்  கல்வி ஆணையத்துடன் நடத்திய கலந்துரையாடலின் போது "புஷ்பா" திரைப்படம் மாணவர்களின் பழக்க வழக்கங்களை பாதித்துள்ளதாகக் கூறினார். அவர் கூறியதாவது "நான் பணி செய்யும் பள்ளியில் பெரும்பாலான குழந்தைகள் 'புஷ்பா' படத்தை பார்த்து தவறான சிந்தனைகளுக்கு அடிமையாகி விட்டனர். அந்த படத்திற்கு எந்தவொரு பொறுப்புமின்றி சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது."


தற்போது இந்த ஆசிரியரின் விவாதம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒரு சிலர் இந்த கருத்தினை எதிர்த்தாலும் ஒரு சிலர் பாராட்டி வருகின்றனர். ஆனாலும் இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் உண்மையாக இருப்பதை காணமுடிகின்றது.

Advertisement

Advertisement