விஜயின் மகன் சஞ்ஜை நடிகர் சந்தீப் கிஷனை வைத்து படம் ஒன்றினை இயக்கி வருகின்றார். குறித்த படம் இடையில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. குறித்த தகவல் வதந்தி என்பதும் படம் 3 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று நிறுத்தபட்டு மீண்டும் படத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தற்காலிக இடைவேளை என்பதும் இந்த இடைவேளையில் படக்குழு இலங்கை சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுள்ளது.
இப் படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங்கினை இலங்கையிலுள்ள கொழும்பு மற்றும் யாழ்பாணங்களில் எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தில் ஒரு சில காட்சிகள் படமாக்க படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மற்றும் இப் படத்திற்கான தொகையினை சஞ்ஜை தயாரிப்பு நிறுவனமா லைகாவிடம் இருந்து வேண்டியுள்ளதாகவும் படம் தொடர்பான ஒவ்வொரு விடயத்தினையும் இவர் மிகவும் நுணுக்கமாக செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் அடுத்த படப்பிடிப்பு மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Listen News!