• Sep 11 2026

ராமமூர்த்தியின் இறுதி சடங்குகளை செய்ய துடிக்கும் கோபி..! ஈஸ்வரி போட்ட கண்டிஷன்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

ராமமூர்த்தி உயிரிழந்த நிலையில் சொந்தம் பந்தம் என எல்லாருமே சூழ்ந்திருக்க, கோபி தனது தந்தைக்குரிய கடமையை செய்வதற்கு முயலுகின்றார்.

ஆனால் ஈஸ்வரி கோபியை தடுத்து நிறுத்தி நீ எந்த விதமான சடங்கு சம்பிரதாயமும் செய்யக்கூடாது என கண்டிஷன் போடுகின்றார். ஆனாலும் கோபி எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்காதீங்க என காலில் விழுந்து கெஞ்சுகிறார்.


எனினும் ராமமூர்த்தியின் கடைசி ஆசைப்படி பாக்யாவை உன்னுடைய மாமாவின் ஆத்மா சாந்திய வேண்டும் என்றால் நீதான் அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும் என சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து பாக்கியா மகளாக இருந்து ராமமூர்த்திக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்கின்றார். இதனால் மொத்த குடும்பமும் உடைந்து காணப்படுகின்றது. இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement