• Sep 09 2026

TVK பெயருடன் ரெட்ரோ லுக்.. இணையத்தைக் கலக்கும் சிபி சத்யராஜின் லேட்டஸ்ட் போட்டோஸ்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் சிபி சத்யராஜ், தற்போது தனது வித்தியாசமான ரெட்ரோ லுக் மூலம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகின்றன.

80-களின் காலகட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த போட்டோஷூட் அமைந்துள்ளது. பழங்காலத்து பைக் ஒன்றில் கெத்தாக அமர்ந்திருக்கும் சிபி சத்யராஜ், அந்த காலத்து உடை, ஹேர் ஸ்டைல் என முழுமையான ரெட்ரோ தோற்றத்தில் காட்சியளிக்கிறார். 


இதனால், இந்த புகைப்படங்கள் ஏதோ ஒரு புதிய திரைப்படத்தின் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால், இந்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ள ஒரு விஷயம் தான் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. சிபி சத்யராஜ் அமர்ந்திருக்கும் பைக்கின் பதிவு எண் பலகையில் “TVK 2026” என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் TVK என்ற பெயர் கவனம் பெற்றுள்ள நிலையில், 2026 என்ற எண்ணும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது வெறும் போட்டோஷூட்டுக்காக பயன்படுத்தப்பட்ட கற்பனை பதிவு எண்ணா, புதிய படத்தின் விளம்பர யுக்தியா அல்லது ஏதேனும் மறைமுக தகவலை சொல்லும் குறியீடா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக 80-களின் பின்னணியில் உருவாகும் புதிய படத்திற்கான அப்டேட் ஏதேனும் இதில் மறைந்திருக்கிறதா என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.

சிபி சத்யராஜின் இந்த ரெட்ரோ கெட்டப் தற்போது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.


Advertisement

Advertisement