• Oct 01 2026

இதுவரை பார்க்காத லுக்கில் ருக்மிணி வசந்த்.. வெளியான புகைப்படங்களால் திணறும் ரசிகர்கள்.!

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் இளம் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ருக்மிணி வசந்த். கன்னட சினிமாவில் அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பு மற்றும் அழகால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

குறிப்பாக, பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் உருவான ‘Toxic’ திரைப்படத்தில் ருக்மிணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

மாடர்ன் லுக்கில் மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ள அவர், தனது ஸ்டைலிஷான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்திலேயே ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் எனப்பலரும் லைக்குகளையும், பாராட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

மேலும், ருக்மிணி வசந்தின் இந்த புதிய போட்டோஷூட் அவரது ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 

Advertisement

Advertisement