• Oct 01 2026

நடிப்பில் மாஸ் காட்டும் ஜிவி பிரகாஷ்! வெளியானது ‘இம்மார்ட்டல்’ படத்தின் மொத்த வசூல்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள ஜிவி பிரகாஷ் குமார், இந்த ஆண்டு தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார். இசையமைப்பாளராக அவர் பணியாற்றிய ‘யூத்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘இருமுடி’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல், அவர் நடிப்பில் வெளியான ‘ஹாப்பி ராஜ்’ திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘இம்மார்ட்டல்’ திரைப்படமும் தற்போது வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது. இந்த படத்தில் கயாடு லோகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம், வெளியானது முதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘இம்மார்ட்டல்’ திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 6 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் ரூ.10 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டில் ஜிவி பிரகாஷின் நடிப்பில் வெளியாகிய இந்தத் திரைப்படமும் வெற்றிப்படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

இசையமைப்பில் வெற்றி, நடிப்பிலும் வெற்றி என ஜிவி பிரகாஷுக்கு 2026ஆம் ஆண்டு தொடர்ந்து சாதகமாக அமைந்து வருவது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் படங்களிலும் இந்த வெற்றிப் பயணம் தொடருமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement