• Jan 19 2025

கனடாவில் கோட் பட ப்ரோமோஷனுக்காக வானில் நிகழ்ந்த அட்டகாசம்? தீயாய் பரவும் வீடியோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில்,  தளபதி ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் காணப்படுகின்றார்கள்.

இந்த படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு காரணம் முன்னணி நடிகர்களான பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, ஜோகி பாபு, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். அத்துடன் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

கோட் படத்திலிருந்து இதுவரையில் நான்கு பாடல்கள் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்த இந்த பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனாலும் கோட் படத்திலிருந்து வெளியான டீசர் அனைத்திற்கும் பதில் சொல்லும் படியாக தெறிக்க விட்டிருந்தது.


தற்போது கோட் படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் திரையரங்கில் ஆரம்பமாகியுள்ளது. இதை அடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டை பதிவு செய்து வருகின்றார்கள். இந்த படம் ஒரு சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளிலும் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில், கனடாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஸ்கை டிரைவிங் மூலம் இந்த படத்தினை பிரமோஷன் செய்துள்ள காட்சிகள் தற்போது சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement