• Jan 19 2025

அதிகாரத்தை கையில் எடுத்து நோஸ்கட்டான கோமதி! உருட்டி சென்ற தங்கமயில்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ஹாலில் கோமதி நிற்க, அங்கு வந்த மீனா தங்கமயில் உள்ள என்ன உருட்டிகிட்டு இருக்கிறா? என்று கேட்க, விருந்து சாப்பாடு ரெடி பண்ணுறாளாம். இன்னைக்கு அவள  சும்மா விடக்கூடாது என்று கோமதி சொல்லுகிறார்.

அதற்கு ராஜீ, என்ன பண்ண போறீங்க என்று கேட்க, போகாத என்று சொல்லுவேன் என கோமதி சொல்ல, அவங்க கேக்கல என்டா என்று ராஜீ கேட்க, மாமியார் சொன்னா மருமகள் கேட்க தானே வேணும் என மீனா சொல்லுகிறார்.

அப்போ இன்னைக்கே உங்க அதிகாரத்தை கையில் எடுங்க, இந்த வீட்டுக்கு ஒரே தலைவி அது நீங்க தான் என ராஜீயும், மீனாவும் கோமதியின் கையை பிடித்து சொல்லுகிறார்கள்.


அதன்பின், தங்கமயில் சாப்பாடு கட்டிக்கொண்டு போக வெளிக்கிட, உன் புருசனுக்கு மட்டும் சாப்பாடு கொண்டு போ என கோமதி சொல்லுகிறார். 

அதற்கு உடனே தங்கமயில், பாண்டியனுக்கு கால் பண்ணி சாப்பாடு கொண்டு வரட்டுமா என கேட்க, அவரும் உனக்கு கஷ்டம் என்றா வேணாம் என சொல்ல, மாமாவே சாப்பாடு கொண்டு வர சொல்லிட்டார். நீங்க தான் சும்மா ஜோசிச்சு கொண்டு இருக்கீங்க என கோமதிக்கு நோஸ்கட் கொடுத்து கிளம்பி செல்கிறார் தங்கமயில், இது தான் இன்றைய தினம் வெளியான ப்ரோமோ.

Advertisement

Advertisement