• Jan 20 2025

டிடிஎஃப் வாசனின் அடுத்த படம் இது தானா? கூடவே கமிட்டான பிரபல நடிகர் யாரு தெரியுமா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

கோவை மாவட்டத்தில் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வதை தனது youtube இல் வீடியோவாக போஸ்ட் செய்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர்  தான் யூட்யூபர் டிடிஎஃப் வாசன். இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றார்கள்.

டிடிஎஃப் வாசல் எந்த அளவுக்கு பிரபலமோ, அந்த அளவுக்கு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே செய்திகளில் தலைப்புச் செய்தியாக இடம்பெறுகின்றார்.

வெள்ளித்திரைகளிலும் டிடிஎப்  வாசனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்க, 'மஞ்சள் வீரன்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானது.


இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஆடுகளம் கிஷோர், நடிகை அபிராமி உடன் டிடி எஃப் வாசன் நடிக்கும் படத்துக்கு ஐபிஎல் என பேரிடப்பட்டு போஸ்டர் ஒன்றும்  வெளியாகியுள்ளது.


இந்த படத்தை ராதா பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, இதற்கு விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிப்புக்கு பெயர் போன நடிகரான கிஷோர் நடித்து உள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement