'விசா' என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் மம்மூட்டி. அதன் பின்பு மௌனம் சம்மதம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து மலையாளம், தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழிகளிலும் நடித்து பிரபலமானார் மம்மூட்டி. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான 'டர்போ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
d_i_a
தற்போது கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார் . இந்த படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகின்றார் கௌதம் வாசுதேவ மேனன்.மேலும் இந்த படம் எதிர்வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் மம்மூட்டி புதுமுக இயக்குநரான டீனோ டென்னிஸ் இயக்கத்தில் 'பசூக்கா' என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14-ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகார்வ பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு மம்மூட்டியின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!