• Feb 05 2025

மரண குத்து மேள தாளத்துடன் ஜெஃப்ரிக்கு அமோக வரவேற்பு.! ஏரியாவை அதிரவிட்ட மாஸ் என்ட்ரி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் தான் ஜெஃப்ரி. இவர் கானா பாடகராக காணப்படுகிறார். இவருடைய பெயர் ஜெஃப்ரி என்றாலும் பெரும்பான்மையானவருக்கு டிங்கு என்றால் தான் தெரியும்.  

ஜெஃப்ரி வழங்கிய பேட்டி ஒன்றில், முழு மூச்சாகவே கானாவை தனது கனவாக எடுத்து தொழில்முறையாக மாற்றி உள்ளேன். இசைக்காக நான் யாரிடமும் வகுப்புக்குச் செல்லவில்லை. எனக்கு யாருமே சொல்லித் தரவில்லை. மெலடி பாடல்களை பாடி தான் எனது இசை பயணத்தை தொடங்கினேன்.

d_i_a

எனக்கு இசையை சொல்லிக் கொடுத்தது எல்லாமே என்னுடைய அம்மா தான். அவர்தான் திருத்தங்களையும் செய்வார் என்று தெரிவித்திருந்தார்.


மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஜெஃப்ரி, தான் பிக்பாஸ் வர காரணமே எங்களுடைய வீட்டின் வறுமை மாற வேண்டும் என்பதற்காக தான் என தெரிவித்திருந்தார். மேலும் அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் எமோஷனலாக பேசியிருந்தார்.

இவ்வாறு மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜெஃப்ரி, நேற்றைய தினம் எலிமினேட் ஆகி  வெளியேறியிருந்தார். இந்த எலிமினேஷன் பலருக்கும் எதிர்பாராத ஒரு சம்பவமாக காணப்பட்டது.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வீடு திரும்பி ஜெஃப்ரிக்கு மேள தாளத்துடன் அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவருடைய ஏரியாவில் உள்ள மக்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து அவருக்கு ஆரத்தி எடுத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.







Advertisement

Advertisement