• Nov 28 2025

6 நாட்களில் வசூலில் புயலைக் கிளப்பிய காந்தாரா: Chapter 1..வெளியான பாக்ஸ் ஆபிஸ் விபரம் இதோ

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள ‘காந்தாரா: Chapter 1’ திரைப்படம் அக்டோபர் 2, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது. பாரம்பரியம், ஆன்மீகம், கடவுள் வழிபாடு, மரபுவழி மோதல்கள் ஆகியவற்றின் பின்னணியாக உள்ள இந்த திரைப்படம்,  முதல் நாளிலிருந்து ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.


தற்போது படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ தகவலின்படி, இந்தப் படம் வெறும் 6 நாட்களில் உலகளவில் ரூ.427.5 கோடி வசூலை எட்டி திரையுலகை பெரிதும் அசைத்துள்ளது.

இந்த வசூல் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படம் வெளியானதன் பலனை பிரதிபலிக்கிறது. 2022-ல் வெளியான ‘காந்தாரா’ திரைப்படம், கன்னட சினிமாவை தேசிய அளவுக்கு எடுத்துச்சென்ற ஒரு திருப்புமுனை. 


அத்தகைய படத்தின் தொடர்ச்சியாக உருவான காந்தாரா: Chapter 1 இத்தகைய சாதனையை படைத்துள்ளதென்பது பாராட்டத்தக்க விடயமாகும். 


Advertisement

Advertisement