தமிழ்த் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனது பிறந்தநாளான அக்டோபர் 7, 2025-ல் ஒரு புதிய முயற்சிக்குத் தொடக்கம் வைத்துள்ளார். அவர் தொடங்கியுள்ள புதிய நிறுவனம் ‘வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்’ என்ற பெயரில் இசைத்துறையில் கால் பதிக்கவிருக்கிறது.
தற்போது திரையுலகில் கலைஞர்கள் மட்டுமின்றி தயாரிப்பாளர்களும் தனித்தன்மை வாய்ந்த படைப்புகளுக்காக புதிய வழிகளை தேடிக்கொண்டு வருகிறார்கள். இந்தத் துறையில் இசையும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர்ந்த ஐசரி கணேஷ், "வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்" எனும் தயாரிப்பு நிறுவனத்துக்குப் பிறகு, இசைத் துறையில் தனி அடையாளத்தை உருவாக்க 'வேல்ஸ் மியூசிக்' எனும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆண்டில் அவர் தனது பிறந்த நாளில் ரசிகர்களுக்கும், திரையுலகிற்குமான சிறப்பு பரிசாகவே இந்த வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிகழ்வானது திரையுலகில் கவனம் பெறக்கூடியதாக இருந்தது. இந்த புதிய நிறுவனத்தின் லோகோ வெளியீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வில், பல முன்னணி திரைபிரபலங்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து தங்களது ஆதரவைப் பதிவு செய்துள்ளனர்.
Listen News!