• Nov 13 2025

யூடியூப் நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல முயன்ற ஷில்பா ஷெட்டி.! தடை விதித்த உயர்நீதிமன்றம்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, யூடியூப் நிகழ்ச்சிக்காக இலங்கை செல்ல அனுமதி கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் அவருடைய இந்த மனுவை நிராகரித்து, வெளிநாட்டுச் செல்ல விரும்பினால், முதலில் ரூ.60 கோடி செலுத்த வேண்டும் என்ற கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.


இந்த வழக்கு தற்போது சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மோசடி வழக்கில் ஏற்கனவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு பயணம் வேண்டுமென கோரிய ஷில்பா ஷெட்டிக்கு இந்த தீர்ப்பு ஒரு வழிகாட்டி தீர்ப்பாகவும், கடுமையான எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

நடிகை ஷில்பா ஷெட்டி சமீபத்தில் ஒரு தொழிலதிபரிடம் இருந்து ₹60 கோடி ரூபாய் மோசடி செய்ததற்கான வழக்கு இடம்பெற்றிருந்தது. இந்த வழக்கின் பின்னணியிலேயே தற்பொழுது நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது.


இதன் மூலம், நடிகை ஷில்பா ஷெட்டியின் வெளிநாடு பயண மனுவை நீதிமன்றம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. 



Advertisement

Advertisement