• Jan 18 2025

'கேம் சேஞ்சர்' பிக் பாஸ் தினேஷ் வெளியிட்ட முதல் வீடியோ! எல்லாருக்குமே தேங்க்ஸ்.. விஜய் டிவிக்கு பெரிய தேங்க்ஸ்...

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்தவர் தான் தினேஷ். இவருக்கு பிக் பாஸ் நிறைவில் 3ர்ட் ரன்னர் அப் கிடைத்தது. இதனை ரசிகர்கள் பலரும் வெகுவாக கொண்டாடினார்கள்.

இந்த நிலையில், பிக் பாஸ் தினேஷ் தனக்கு ஆதரவு அளித்த அனைத்து  ரசிகர்களுக்கு, மக்களுக்கும் நன்றி தெரிவித்து தனது முதலாவது வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், எல்லாருக்குமே வணக்கம்... பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடந்து முடிந்த திருவிழா போல தான் இருந்தது. அதில் வந்த எல்லா கண்டஸ்ட்டும் எவ்வளவோ கனவுகளோடு தான் வந்தாங்க.


அந்த மாதிரி இந்த பிக் பாஸ் வாய்ப்புக்காக நிறைய தவம் இருந்தும், இது கிடைக்காதா? அப்படின்னு இருந்த ஒரு சமயத்துல தான் இந்த வாய்ப்பு கிடைச்சது.

இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் டிவி மற்றும்  விஜய் டிவி ரிலேட்டடா இருக்கிறவங்க,  பிக் பாஸ் சீசன் 7இல் வொர்க் பண்ண என்டிஆர் டீம் என டோட்டல் டீம்க்கும் என்னோட ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.

பிக் பாஸ் சீசன் 7இல் தினேஷ் அப்படின்னு ஒரு பெர்சன் உங்களுக்கு புடிச்ச மாதிரி நிறைய கேம் விளையாடிட்டு இருந்தன். இப்போ வெளியில வந்து ரெண்டு நாளாஎனக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ் எல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு.


என்னை பார்த்த சில பேர்,  நீங்க நல்ல ஒரு மனிதர், நீங்க நல்லா கேம் விளையாடி இருந்தீங்க.. அப்படின்னு நிறைய பேர் நேர்ல பார்த்து என்னை அப்ரிஷியேட் பண்ண தான் இருக்கட்டும். ரொம்ப ஹாட் ஃபுல்லா வந்து நீங்க எனக்கு கொடுத்த கமெண்ட்ஸ், அப்புறம் சோசியல் மீடியால எனக்கு சப்போர்ட் பண்ணவங்க இப்டி எல்லாருக்கும் தேங்க்ஸ் என சொல்லி உள்ளார்.

இறுதியாக 'கேம் சேஞ்சர்' என்ற அவொட் கமல் சார்ட கைல இருந்து வாங்கும்போது ரொம்பவே சந்தோஷப்பட்டேன். ஏன் லைப்ல ரொம்பவே சவால்கள் பார்த்து வந்தேன். ஒவ்வொரு மனுசருக்கும் லைஃப்ல கேம் சேஞ்சிங் பண்ண வேண்டிய ஒரு மூவ்மெண்ட் வரும். நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்கு அதை கொடுத்து இருக்கீங்க. என்று மீண்டும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து விடை பெற்றுள்ளார் தினேஷ்.

Advertisement

Advertisement