• Jan 19 2025

13 லட்சம் பில்லுடன் பின்னால் திரிந்த PR டீம்..! டைட்டில் வின்னருக்கு டைட்டாக வச்ச ஆப்பு? ரசிகர்களும் கடும் சீற்றம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


அதன்படி, பிக் பாஸ் டைட்டில் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்ட மறுநிமிடமே, அவர் நடித்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.

எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா மக்களின் வாக்குகளால் முழுமையாக வெற்றி பெற இல்லை. அவருக்கு நிறைய PR டீம் வேலை செய்தது. மக்களின் ஓட்டை களவாடி தான் அவர் வெற்றி பெற்றார் என அடுக்கடுக்காக விமர்சனங்கள் தொடர்ந்து வருகின்றது.


இந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனா இதுவரையில் PR டீம்க்கு பணம் செலுத்தாத காரணத்தினால், அவரது சோசல் மீடியா கணக்குகளை பிடித்து வைத்துள்ளதாக தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.

மேலும், அர்ச்சனாவின் சோசல் மீடியா கணக்குகளின் கடவுச்சொற்களையும் PR டீம் கொடுக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அர்ச்சனா தமக்கு இது வரையில் நன்றி தெரிவிக்கவில்லை என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement