• Mar 14 2025

"பராசக்தி " படப் பிரச்சினை தீர்வுக்கு வந்துள்ளதா? - படக்குழுவின் பதில்!...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் ஆண்டனி  ஆகியோர் விளங்குகின்றனர். அவர்களது படம் இந்த வருடம் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. அதேவேளை படத்தின் பெயரை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் தமது படத்துக்கு ஒரே பெயரை வைத்துள்ளமை மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் அருண் பிரபு இயக்கிய விஜய் ஆண்டனியின் படத்தின் பெயர் தமிழில் "சக்தி திருமகன் " என்றும்  தெலுங்கு , ஹிந்தி ,மலையாளம் போன்ற மொழிகளில் "பராசக்தி " எனவும் பெயரிடப்பட்டுள்ளது.


அதே போல் சிவகார்த்திகேயனின் படத்திற்கும் "பராசக்தி " என்ற பெயரை  வைத்துள்ளது  ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் யாரின் படத்துக்கு பராசக்தி என்ற பெயரை வைக்கப் போகின்றார்கள்  என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது ஒரு போட்டோ வெளியாகி உள்ளது.

அதில்  இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் சந்தித்து ஒரு முடிவெடுத்துள்ளனர். அதன்படி விஜய் ஆண்டனி கன்னடம் , மலையாளத்தில் "பராசக்தி "என்று பெயரிடுவதுடன் தமிழில் "சக்தி திருமகன் " என்ற பெயரை வைக்கப் போவதாகவும்  சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கில் "பராசக்தி"  என்ற பெயரை வைப்பதற்கும்  முடிவெடுத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement